கோலிவுட்டில் பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த இசையமைப்பாளர் தேவா, இப்போது உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சிகளில் பிஸியாக இருக்கிறார். இதற்கிடையில் ஹிப் ஹாப் ஆதி இயக்கியும், நாயகனாகவும் நடிக்கும் ‘மீசைய முறுக்கு 2’ படத்தில் தாதா கதாபாத்திரத்தில் நடிக்க அழைத்துள்ளார். ஆனால் தேவா அதனை மறுத்து விட்டார்.

தேவா கூறியதாவது, “இப்போது சென்னை, இலங்கை, ஜப்பான், பாரீஸ் போன்ற இடங்களில் தொடர்ச்சியாக இசை நிகழ்ச்சிகள் நடக்கிறது. அதனால் படப்பிடிப்புக்கு நேரம் ஒதுக்க முடியாது. அதோடு, எனக்கு நடிப்பே தெரியாது என்பதால் ஹிப் ஹாப் ஆதியின் கோரிக்கையை ஏற்க முடியவில்லை” என்றார்.
2017 ஆம் ஆண்டு வெளியான ‘மீசைய முறுக்கு’ சுந்தர்.சி தயாரிப்பில் பெரிய வரவேற்பை பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து ‘மீசைய முறுக்கு 2’யை ஹிப் ஹாப் ஆதி தொடங்கியுள்ளார். தற்போது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையிலும், தேவாவுடன் நடந்த இந்த உரையாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், ஹிப் ஹாப் ஆதியின் கடைசி படம் ‘கடைசி உலகப் போர்’ கலவையான விமர்சனங்களை சந்தித்தது. அதற்கு பிறகு அவர் முழு கவனத்தையும் ‘மீசைய முறுக்கு 2’ மீது செலுத்தி வருகிறார். முதல் பாகம் ரசிகர்களிடையே மிகப்பெரிய ஹிட்டாகியதால், இரண்டாம் பாகமும் அதே அளவு வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.