புனே: மகாராஷ்டிராவில் பள்ளத்தாக்கில் நின்று ‘செல்பி’ எடுக்க முயன்ற பெண் 100 அடி பள்ளத்தில் விழுந்து பின்புமீட்கப்பட்டார்.மஹாராஷ்டிரா மாநிலத்தின் சதாரா மாவட்டத்தில் போர்ன் காட் மலைத்தொடர் அமைந்துள்ளது.
விடுமுறை நாட்களில் ஏராளமானோர் இங்கு கூடினர். 26 வயது பெண் ஒருவர் பள்ளத்தாக்கு முன் நின்று செல்ஃபி எடுக்க முயன்றார். அப்போது நிலை தடுமாறி 100 ஆழமான பள்ளத்தில் விழுந்தார்.
தகவலின் பேரில், உள்ளூர் மீட்புப் படையினர் வந்து சிறு காயங்களுடன் இளம் பெண்ணை மீட்டனர். அந்த வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. கடந்த ஜூலை 16ஆம் தேதி அதே பகுதியில் செல்ஃபி எடுக்க முயன்ற இளம்பெண் 300 அடி பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.