சென்னை: அசைவ பிரியர்களுக்கு இறால் கிரேவி என்றால் பிடிக்கும். இந்த பதிவில் சுலபமான அதே சமயம் சுவையான இறால் கிரேவி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சுத்தம் செய்யப்பட்ட இறால் – 1/2 கிலோ
பட்டை, லவங்கம் – சிறிது
பெரிய வெங்காயம் – 3
தக்காளி – 3
இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ் ஸ்பூன்
சீரகம் – 1 டீஸ் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ் ஸ்பூன்
சீரக தூள் – 1/2 டீஸ் ஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ் ஸ்பூன்
மல்லி தூள் – 1 டீஸ் ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது
எண்ணெய் – தே.அளவு
உப்பு – தே.அளவு
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, லவங்கம், சீரகம், நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் தோல் நீக்கிய இறாலை சேர்த்து 3 நிமிடங்கள் நன்கு கிளறி விடவும்.
இப்பொழுது மிளகாய் தூள், சீரக தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், மல்லி தூள், உப்பு சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு 10 நிமிடங்கள் வேக விடவும். பின்னர் கொத்த மல்லி தூவி அடுப்பை அணைக்கவும். இப்போழுது சூப்பரான இறால் கிரேவி தயார்.