திண்டிவனம்: அனைத்துக் கட்சியினருக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். என்ன தெரியுங்களா?
தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பா.ம.க. இளைஞர் சங்கத் தலைவர் பதவியை தமிழ்குமரனுக்கு வழங்கியுள்ளேன். அவர் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று வாழ்த்துவோம்.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை சொல்லி உள்ளேன். கரூர் கூட்ட நெரிசல் போன்ற துயரச் சம்பவங்கள் ஏற்படாமல் அரசியல் கட்சிகள் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு உயிர் கூட பலியாகக்கூடாது. அந்த அளவுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு காவல்துறை வழிகாட்ட வேண்டும்.
கரூர் துயர சம்பவத்தில் முதலமைச்சர் என்ன செய்ய வேண்டுமோ, அதனை செய்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனிடையே, கரூர் விவகாரத்தில் விஜய் வீடியோ வெளியிட்டது தொடர்பான கேள்விக்கு, முதலமைச்சர் எப்படி காரணமாக முடியும்? என்றார்.