சென்னையில் மெட்ரோ ரயில்கள் பயணிகளிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. சரியான நேரத்தில் ரயில்கள் இயக்கப்படுவது, மாற்றங்கள் இருந்தால் உடனுக்குள் அறிவிப்பு, பயணிகளுக்கு தரமான சேவை, அதிகரித்த தேவைக்கு ஏற்ப ரயில்கள் இயக்கப்படுதல் மற்றும் நியாயமான கட்டணங்கள் போன்ற காரணங்கள் பயணிகளை மெட்ரோ ரயிலுக்கு ஈர்க்கின்றன. 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 1.01 கோடி பயணிகள் சென்னையில் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல் படி, செப்டம்பரில் மொத்தம் 1,01,46,769 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளனர். இதுவரை ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2025 ஜனவரி மாதத்தில் 86,99,344 பயணிகள் இருந்தார்கள்; ஜூலை மாதம் 1,03,78,835 பயணிகள் பயணம் செய்தனர். அதிகபட்ச பயணிகள் ஒரே நாளில் 3,97,217 பேர் பதிவாகியுள்ளனர்.
பயணச் சீட்டு முறைகளில், சிங்கார சென்னை அட்டை (Travel Card) மூலம் 51,96,904 பயணிகள் பயணித்தனர். க்யூஆர் குறியீடு மூலம் 48,34,214 பயணிகள் பயணம் செய்தனர். மேலும், Paytm, PhonePe, Whatsapp, Chennai One App போன்ற தொழில்நுட்ப வழிமுறைகள் பயணர்களுக்கு கிடைத்தன.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பயணர்களுக்கு பாதுகாப்பான மற்றும் நம்பகமான சேவையை வழங்குவதுடன், க்யூஆர் குறியீடு மற்றும் டிஜிட்டல் Travel Card பயணிகளுக்கு 20% கட்டணத் தள்ளுபடியும் வழங்கி வருகிறது. மெட்ரோ ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களை பராமரிப்பதில் ஒத்துழைப்பு வழங்கும் பயணிகளுக்கு மெட்ரோ நிர்வாகத்தின் சார்பில் நன்றியையும் தெரிவித்துள்ளது.
#