சென்னையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டுக்கொண்டே இருக்கிறது. நேற்று காலை குறைந்த நிலையில் இருந்த தங்கம் மாலையில் திடீரென அதிகரித்து, இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.87,600 ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலையும் ரூ.10,950 ஆக உயர்ந்துள்ளது. இதனால் நகை வாங்கத் திட்டமிட்ட பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு கிராம் தங்கம் ரூ.7,150, ஒரு சவரன் ரூ.57,200 விலையில் இருந்தது. கடந்த சில மாதங்களில் தங்கம் தொடர்ச்சியாக விலை உயர்வை நோக்கி நகர்ந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் காலை வேளையில் ரூ.110 குறைந்தது, ஆனால் மாலை நேரம் ரூ.50–60 உயர்ந்தது. வெள்ளியின் விலையும் புதிய உச்சத்திற்கு சென்றுள்ளது; இன்று ஒரு கிலோ வெள்ளி ₹1,65,000 ஆக விலை உயர்ந்துள்ளது.
உலக பொருளாதார சூழ்நிலை, அரசியல் பதற்றம், மற்றும் அமெரிக்கா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளில் மத்திய வங்கிகள் மேற்கொண்டு வரும் தங்க சேமிப்பு கொள்கைகள் இதற்கு காரணமாக உள்ளன. அமெரிக்காவின் வரிக் குறைப்பு எதிர்பார்ப்பு முதலீட்டாளர்களை பாதுகாப்பான முதலீட்டு விருப்பங்களுக்குக் கவர்ந்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா இதைச் சம்பந்தமாக கருத்து தெரிவித்தார்.
பொருளாதார நிபுணர்கள், தங்க விலை இன்னும் சில வாரங்களில் மேலே செல்ல வாய்ப்பு இருப்பதால், நகை முதலீட்டில் ஈடுபடுவோர் தற்போதைய நிலையை கவனமாக ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். மக்கள் “இப்போதே வாங்கலாமா அல்லது இன்னும் காத்திருக்கலாமா?” என்ற சந்தேகத்தில் உள்ளனர்.