சென்னை: ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்து அனைவரும் கொண்டாடிய காந்தாரா திரைப்படத்தின் முதல் பாகம் வெற்றியைத் தொடர்ந்து காந்தாரா சாப்டர் 1 கடந்த வியாழக்கிழமை தியேட்டரில் வெளியாகியுள்ளது. பான் இந்திய அளவில் வெளியான இந்த படத்தை ரசிகர்கள் பெரிய ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டாடி வருகின்றனர்.

பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா சமூக வலைத்தளத்தில் காந்தாரா சாப்டர் 1 படம் வெறும் படம் அல்ல, ஒரு புரட்சி என்று பாராட்டியுள்ளார். ரிஷப் ஷெட்டி புதிய இயக்க முறையை கொண்டுவந்து பாரம்பரிய சினிமா விதிகளைத் தகர்த்துள்ளார். அவரது தனித்துவமான கதை சொல்லும் பாணி, முன்னைய படைப்புகளும், இந்திய சினிமாவின் எதிர்காலத்தை மாற்றும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
படத்தின் முதல் நாளில் உலகளவில் ரூ.50 கோடியுக்கும் மேல் வசூல் செய்யப்பட்டது. கர்நாடகாவில் ரூ.26 கோடி, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரூ.13 கோடி, தமிழ்நாட்டில் ரூ.5.5 கோடி மற்றும் வெளிநாடுகளில் ரூ.3 கோடி வசூலாகியுள்ளன. இரண்டாம் நாளில் படம் உலகம் முழுவதும் ரூ.45 கோடி வசூல் செய்து, சர்வதேச வசூல் ரூ.105 கோடியை தொட்டுள்ளது.
காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தில் ரிஷப் ஷெட்டியுடன் ருக்மிணி வசந்த், ஜெயராம், குல்ஷன் தேவையா, பிரமோத் ஷெட்டி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளனர். ஹோம்பளே பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் அரவிந்த் காஷ்யப் ஒளிப்பதிவு செய்தார், அஜனீஷ் லோகேஷ் இசையமைத்துள்ளார். படம் திரையிடப்பட்ட இடங்களில் வசூலை அள்ளி வருகிறது.