இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் ஹெச்ஆர்எக்ஸ் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இதன் மூலம், அமேசான் பிரைம் வீடியோவிற்காக ஒரு வலைத் தொடரைத் தயாரிக்கிறார்.
‘தப்பார்’ படத்தை இயக்கிய அஜித் பால் சிங் இதை இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத திரில்லர் வலைத் தொடரில் பார்வதி திருவோத்து முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்.

அலயா எஃப், சிருஷ்டி வஸ்தவா, ரமா சர்மா மற்றும் சபா ஆசாத் ஆகியோரும் நடிக்கின்றனர். ஹிருத்திக் ரோஷன் இந்த படத்தில் நடிக்கவில்லை என்றும், அதை மட்டுமே தயாரிப்பதாகவும் கூறியுள்ளார்.
மலையாள நடிகை பார்வதி திருவோத்து தமிழில் பூ, மரியான், உத்தம வில்லன், தங்கலான் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.