புது டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ரூ.24,634 கோடி மதிப்பிலான 4 மல்டி டிராக்கிங் ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், குஜராத் மற்றும் சத்தீஸ்கரின் 18 மாவட்டங்களில் 4 ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இது இந்திய ரயில்வேயின் தற்போதைய வலையமைப்பில் 894 கி.மீ. சேர்க்கும்.
இந்தத் திட்டங்களில் மகாராஷ்டிராவில் 314 கி.மீ ரயில் பாதைகள் (வர்தா மற்றும் பூசாவல் இடையே 3-வது மற்றும் 4-வது பாதைகள்) அடங்கும். மேலும், மகாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கரில் உள்ள கோண்டியா-டோங்கர்கர் இடையே 84 கி.மீ நீளமுள்ள 4-வது பாதை, குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் வதோதரா-ரத்லம் இடையே 256 கி.மீ நீளமுள்ள 3-வது மற்றும் 4-வது பாதைகள், மத்தியப் பிரதேசத்தில் இடார்சி-போபால்-பினா இடையே 84 கி.மீ நீளமுள்ள 3-வது மற்றும் 4-வது பாதைகள்.

4-வது பாதையும் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. அசாம், குஜராத்திற்கு ரூ. 707 கோடி மத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்மட்டக் குழு, கடந்த ஆண்டு வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட அசாம் மற்றும் குஜராத்திற்கு ரூ. 707.97 கோடி நிதி உதவிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. தீயணைப்பு சேவைகளை விரிவுபடுத்துதல் மற்றும் நவீனமயமாக்குவதற்காக ஹரியானா, மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானுக்கு தேசிய பேரிடர் மீட்பு நிதியிலிருந்து ரூ. 903.67 கோடி நிதி உதவிக்கும் உயர்மட்டக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
வெள்ள நிவாரணத்திற்காக ஒதுக்கப்பட்ட ரூ. 707.97 கோடியில், அசாமுக்கு ரூ. 313.69 கோடியும், குஜராத்திற்கு ரூ. 394.28 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, மாநிலங்களுடன் தோளோடு தோள் நின்று இயற்கை பேரிடர்களின் போது தேவையான அனைத்து ஆதரவையும் வழங்கும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.