குடியாத்தம்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள மோர்தானா கிராமத்தில் உள்ள அணையை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று அரசு அதிகாரிகள் மற்றும் உள்ளூர் அரசு பிரதிநிதிகளுடன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், செய்தியாளர்கள் வீடியோ அழைப்பில் விஜய்யின் ஆறுதல் பேச்சு குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் கூறியதாவது:- தவெக தலைவர் நடிகர் விஜய் கரூர் சம்பவத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்படாவிட்டால், அவர் தைரியமாக தனது ஆதரவாளர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறியிருக்கலாம்.

நடிகர் விஜய் தன் நெஞ்சே தன்னை சுடுகிற காரணத்தால் வெளியே வர பயப்படுகிறார். எனவே, நேரடியாகச் செல்வதற்குப் பதிலாக வீடியோ அழைப்பு மூலம் பேசுகிறார்.
கச்சத்தீவு குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்த கருத்துகள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும், யாரோ எழுதியதை அடிப்படையாகக் கொண்டு அவர் பேசுகிறார் என்றும் அவர் கூறினார்.