தீபாவளி வந்தாலே, இனிப்புகளில் முதலில் நினைவுக்கு வருவது குலாப் ஜாமூன் தான். ஆனால், வீட்டில் செய்வதற்கு முயன்றால், சில சமயம் அது உடைந்து போகவும், நடுவே கடினமாகவும் இருக்கும். இந்த பிரச்சனையைத் தவிர்க்க, மாவு தயாரிப்பது முதல் சிரப்பில் ஊறவைப்பது வரை சில சிறிய நுட்பங்களைப் பின்பற்றினால் கடைல வாங்கும் ஜாமூன்களை விட சுவையாக வரும்.

முதலில், மாவை சப்பாத்தி மாவைப் போல கெட்டியாக பிசையக் கூடாது. லேசாக, மென்மையாக கைகளால் கலக்கி 5–10 நிமிடங்கள் மூடி வைக்க வேண்டும். உருண்டைகளை உருட்டும் போது விரிசல்கள் இல்லாமல் சிறிய அளவில் உருட்டுவது முக்கியம்; அப்படி இருந்தால் வறுக்கும் போது உடையாது.
வறுக்கும்போது தீ மிதமானதாக இருக்க வேண்டும். அதிக தீயில் வறுத்தால் வெளியில் பழுப்பு நிறமாகி உள்ளே பச்சையாக இருக்கும்; குறைந்த தீயில் வறுத்தால் எண்ணெய் அதிகம் உறிஞ்சி உடைந்து போகும். எனவே, நிலையான நடுத்தர தீயிலேயே வறுக்கவும்.
சிரப்பை தயாரிக்கும் போது, அது மிக தண்ணியாகவும் கெட்டியாகவும் இருக்கக் கூடாது – இடைநிலை பதம் சிறந்தது. வறுத்த ஜாமூன்களை உடனடியாக வெதுவெதுப்பான சிரப்பில் போட்டு 2–3 மணி நேரம் ஊறவைத்தால், அவை மென்மையாகவும் ஜூசியாகவும் இருக்கும். இதுபோல் செய்தால், உங்கள் தீபாவளி இனிப்பு டேபிளில் ஜாமூன் தான் ஹீரோவாக இருக்கும்!