அக்டோபர் மாதம் தொடங்கியதிலிருந்து தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகிறது. கடந்த சில நாட்களில் சிறிய அளவில் சரிந்த தங்க விலை, இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது.

இன்று (அக்டோபர் 11) காலை நிலவரப்படி,
- 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 11,425 எனவும், ஒரு சவரன் ரூ. 91,400 எனவும் விற்பனை செய்யப்படுகிறது. இது நேற்றைய விலையை விட சவரனுக்கு ரூ. 680 உயர்வு ஆகும்.
- 18 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 9,450, ஒரு சவரன் ரூ. 75,600 என விற்பனையாகிறது.
- வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 187, ஒரு கிலோ ரூ. 1,87,000 ஆக உயர்ந்துள்ளது.
நகை பிரியர்களுக்கு இது ஒரு அதிர்ச்சி எனலாம். தொடர்ந்து உலக சந்தையில் தங்கம் விலை ஏற்றம் காணப்படுவதால், வருங்கால நாட்களிலும் தங்கம் விலை மேலும் உயரும் வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் சென்னையை உட்பட அனைத்து முக்கிய நகரங்களிலும் தங்கம் விலை இவ்வாறு உயர்வடைந்துள்ளதாக நகை வியாபாரிகள் கூறுகின்றனர்.