அக்டோபர் மாதம் தொடங்கியதிலிருந்து தங்கம் விலையில் இடையறாத உயர்வு காணப்படுகிறது. தினந்தோறும் ஏற்றம் காணும் தங்கம் விலை, சாமானிய மக்களுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது. குறிப்பாக கடந்த சில நாட்களில் சவரன் விலை ரூ.90,000 ஐத் தாண்டிய நிலையில், இன்றைய நிலவரம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன் தினம் தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.85 உயர்ந்திருந்தது. அதன்படி, 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.11,425க்கும், ஒரு சவரன் ரூ.91,400க்கும் விற்பனையாகி வந்தது. ஆனால் இன்று அக்டோபர் 13 அன்று மீண்டும் விலை உயர்ந்துள்ளது. இன்று ஒரு கிராம் ரூ.11,525க்கும், ஒரு சவரன் ரூ.92,200க்கும் விற்பனையாகிறது.

அதேபோல், 18 காரட் தங்கமும் உயர்வைச் சந்தித்துள்ளது. தற்போது ஒரு கிராம் ரூ.9,525க்கும், ஒரு சவரன் ரூ.76,200க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையும் உயர்வைத் தவிர்க்கவில்லை; ஒரு கிராம் ரூ.195க்கும், ஒரு கிலோ ரூ.1,95,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை உயர்வுக்கான காரணமாக உலக பொருளாதாரமும், டாலர் மதிப்பில் ஏற்படும் மாற்றம் மற்றும் சர்வதேச தங்க சந்தையில் உள்ள கோரிக்கைகள் குறிப்பிடப்படுகின்றன. இதனால், தங்க முதலீடு செய்ய நினைக்கும் பொதுமக்கள் விலை மாற்றங்களை கவனமாக ஆராய வேண்டிய அவசியம் உள்ளது.