சென்னை: கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் உதவிகரமாக இருப்பதில் கரிசலாங்கண்ணிக்கு தனியிடம் உண்டு. அத்தகைய கரிசலாங்கண்ணியில் ஹேர்பேக் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
கரிசலாங்கண்ணி- கைப்பிடியளவு
மோர்- கால் கப்
விளக்கெண்ணெய்- 2 ஸ்பூன்
செய்முறை: கரிசலாங்கண்ணியை நன்கு கழுவி மிக்சியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும். அடுத்து அதனுடன் மோர் மற்றும் விளக்கெண்ணெய் சேர்த்து 15 நிமிடங்கள் ஊறவிட்டுப் பயன்படுத்தவும்.
இந்த ஹேர்பேக்கினை தலைமுடி, வேர்க்கால்கள் என அனைத்து இடத்திலும் அப்ளை செய்து சீயக்காய் கொண்டு முடியினை அலசவும், அவ்வாறு செய்தால் தலைமுடியானது கொத்து கொத்தாக வளரும்.