சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வடக்கு மாவட்டங்களிலும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
இந்த சூழ்நிலையில், திருவண்ணாமலை முதல் தென்காசி வரையிலான 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.