செங்கோட்டை: தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே தனியார் தோட்டத்தில் புகுந்த ஒற்றைக் காட்டு யானையை வனத்திற்குள் விரட்டியடிக்கும் முயற்சிகள் நடந்தன.
வடகரை பகுதியில் புகுந்த அந்த யானை அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்களை ருசிக்க வந்திருந்தது. இதையறிந்த வனத்துறையினர் வெடிகளைப் போட்டு யானையை விரட்ட முயன்றனர்.
இந்நிலையில், தெனாலி எனப் பெயரிடப்பட்ட அந்த யானையிடம் அங்கிருந்த ஒருவர், நெல்லு நெறஞ்சு கிடக்கு… காடு வம்பாகிடும்…. தயவு செஞ்சு போயிருப்பா…. எனக் கெஞ்சிக் கேட்க யானையும் சமர்த்தாக நகர்ந்து சென்றது.
இதை பார்த்தவர்கள் அனைவரும் அதிசயத்துடன் இந்த சம்பவத்தை பேசிச் சென்றனர்.