உணவு ஆரோக்கியத்திற்கு முக்கியமானது என்பது அனைவருக்கும் தெரிந்தாலும், எப்படி சாப்பிடுவது என்பது பெரும்பாலும் புரியவில்லை. உணவின் அளவு, வேகம் மற்றும் சூழல் அனைத்தும் உடல் ஆரோக்கியத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

- வேகமாக சாப்பிடுவது தவிர்க்கவேண்டும் – சாப்பிடும் போது மெதுவாக, நன்கு மென்று சாப்பிடுதல் செரிமானம் மற்றும் உணவு அளவை கட்டுப்படுத்த உதவும்.
- வேறு செயல்களில் ஈடுபடாமல் சாப்பிடுங்கள் – டிவி பார்க்க, புத்தகம் படிக்க, வேலை செய்யும்போது சாப்பிடுவது உணவின் சுவையையும் மனமும் உணருவதில் தடையாகும்.
- பசியே அடித்தால் சாப்பிட வேண்டும் – மன அழுத்தம் அல்லது கிரேவிங்ஸ் அடிக்கடி உணவு சாப்பிடும் பழக்கத்தை உருவாக்கும். கிரேவிங்ஸ் போது பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவது நல்லது.
- இரவு உணவை தாமதமாக சாப்பிட வேண்டாம் – படுக்கைக்கு 2–3 மணி முன்னர் சாப்பிடுவது செரிமானத்திற்கு உதவும்.
- சோடியம், சர்க்கரை, வறுத்த உணவுகளை தவிர்க்கவும் – வயிறு நிறைவான உணர்வு தருவதாக இருந்தாலும், அதிக பசியை தூண்டும் அபாயம் உண்டு.
- சிறிய தட்டில் பல முறை சாப்பிடுங்கள் – இதனால் தேவையான அளவு உணவையே சாப்பிட முடியும், அதிக சாப்பிடும் பழக்கம் தடுக்கும்.
- குளிர்பானங்கள் மற்றும் சர்க்கரை மிகுந்த ஜூஸ்களை தவிர்க்கவும் – தினமும் 6–8 டம்ளர் தண்ணீர் குடிப்பது சிறந்தது.
- காலை உணவை தவிர்க்காதீர்கள் – காலை உணவு அதிக கொழுப்புச்சத்து இல்லாமல், ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்.
இந்த எளிய வழிமுறைகள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். உணவு எப்போது, எவ்வாறு, எவ்வளவு சாப்பிடப்படுகின்றது என்பதையே கவனிக்க வேண்டியது முக்கியம்.
#