மாரடைப்புகள் பெரும்பாலும் மனிதர்கள் தனியாக இருக்கும் போதே ஏற்படுவதால், மருத்துவர்கள் முன்னெச்சரிக்கை எடுப்பது மற்றும் அறிகுறிகளை அறிதல் முக்கியம் என எச்சரிக்கின்றனர். மாரடைப்பின் போது உடனடியாக நடவடிக்கை எடுப்பது உயிரைக் காப்பாற்ற உதவும்.
மாரடைப்பு என்றால் என்ன?
இரத்தத்தில் உள்ள கொழுப்புகள் இதயத் தமனிகளில் படிந்து பிளேக் உருவாக்கும் போது இதயத்திற்கு போதுமான அளவு இரத்தம் செல்காது. இதனால் இதய தசை சேதமடைகிறது மற்றும் மாரடைப்பு ஏற்படுகிறது.

கவனிக்க வேண்டிய அறிகுறிகள்:
மார்பில் கடுமையான அழுத்த வலி, இடது கை, கழுத்து, தாடை அல்லது முதுகில் வலி, சுவாசிக்க சிரமம், கடுமையான சோர்வு, குமட்டல் மற்றும் வாந்தி, அதிக வியர்வை போன்றவை முதன்மை அறிகுறிகள். பெண்களில் சில அறிகுறிகள் மாறுபடும்; முதுகு, கை அல்லது கழுத்தில் வலி மற்றும் சோர்வு முதன்மையாக இருக்கும்.
தனியாக இருந்தால் செய்ய வேண்டிய நடவடிக்கைகள்:
- உடனடி அவசர சேவையை அழைக்கவும் (108 அல்லது உள்ளூர் எண்).
- மருத்துவரின் ஆலோசனையுடன் ஆஸ்பிரின் ஒரு மாத்திரை எடுத்துக் கொள்ளலாம்.
- இடது பக்கத்தில் கால்களை வளைத்து வசதியான நிலையில் உட்காரவும்.
- அருகிலுள்ள யாரையாவது உடனடியாக அழைக்கவும்.
- அமைதியாக மூச்சை கட்டுப்படுத்தவும்.
- எதையும் சாப்பிடவோ, குடிக்கவோ முயற்சிக்க வேண்டாம்.
முக்கிய குறிப்புகள்:
முன்கூட்டிய அறிகுறிகளை தவிர்த்துக் கொள்ளாமல் கவனித்தல், உடனடியாக உதவி கோர்தல் மற்றும் மனநிலையை கட்டுப்படுத்தல் உயிரைக் காப்பாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.