சென்னை: ஆடிப்பூரம் அன்று பெருமாள் கோயில்களுக்கு சென்று ஆண்டாளை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
ஆடிப்பூரம், ஆண்டாள் நாச்சியார் அவதரித்த திருநாளாகும். மகாவிஷ்ணுவின் பக்தரான பெரியாழ்வாருக்கு அருள் செய்வதற்காக மகாலட்சுமி தேவியே ஆண்டாளாக அவதரித்ததாகவும், பூமா தேவியின் மறு வடிவம் தான் ஆண்டாள் என்பது புராணங்கள் சொல்கின்றன.
ஆடிப்பூரம் அன்று பெருமாள் கோயில்களுக்கு சென்று ஆண்டாளை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அதன்படி கோயிலில் ஆண்டாளுக்கு வளையல் வாங்கிக் கொடுப்பது மிகவும் விசேஷமானதாகும்.