அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் மற்றும் டென்மார்க்கின் யூனிவர்சிட்டி ஆஃப் கோபன்ஹேகன் நடத்திய ஆய்வுகள், குழந்தைகள் மொபைல், டேப்லெட் அல்லது கம்ப்யூட்டர் போன்ற டிஜிட்டல் ஸ்கிரீன்களுக்கு நீண்ட நேரம் அமர்வது, அவர்களின் இதய மற்றும் வளர்சிதை ஆரோக்கியத்தில் மறைமுகமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கை செய்கின்றன.

ஆய்வுகள் காட்டியதாவது, நீண்ட ஸ்கிரீன் டைம், உயர் ரத்த அழுத்தம், இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சனைகள் போன்ற கார்டியோமெட்டபாலிக் அபாய காரகங்களுடன் தொடர்புடையதாகும். குறிப்பாக 2–19 வயது அமெரிக்க குழந்தைகளில் 29% பேர் மட்டுமே ஆரோக்கியமான கார்டியோமெட்டபாலிக் ப்ரொஃபைலை கொண்டிருந்தனர்.
டென்மார்க்கில் சுமார் 1,000 குழந்தைகள் மற்றும் இளைய பருவத்தினரின் தரவுகளைப் பயன்படுத்திய ஆய்வில், ஒவ்வொரு கூடுதல் மணிநேர ஸ்கிரீன் டைமும் 10–18 வயது குழந்தைகளில் கார்டியோமெட்டபாலிக் ஸ்கோர்களை அதிகரிக்கக்கூடியது என தெரியவந்தது. குறைந்த தூக்கம் இந்த பாதிப்பை மேலும் தீவிரமாக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பெற்றோர்கள் செய்ய வேண்டியது:
- தினசரி உணவு நேரம் மற்றும் படுக்கைக்கு செல்லும் ஒரு மணி நேரத்திற்கு முன் ஸ்கிரீன்-ஃப்ரீ நேரங்களை பின்பற்ற வைக்க வேண்டும்.
- மாலை நேர நடைப்பயிற்சி, விளையாட்டு மற்றும் வெளிப்புற நடவடிக்கைகள் மூலம் குழந்தைகள் அமர்ந்தே இருக்காமல் செய்ய வேண்டும்.
- பெற்றோர்கள் தங்கள் பழக்க வழக்கங்களை ஆரோக்கியமாக வைத்திருப்பது, குழந்தைகள் அதனைப் பின்பற்ற உதவும்.
- புத்தகம், கலை, ஆர்ட்ஸ், விளையாட்டு போன்ற மாற்று நடவடிக்கைகள் மூலம் ஸ்கிரீன் டைமைக் குறைக்க முடியும்.