ஊழியர்களுக்கு நிம்மதியான செய்தியை எம்பிளாயீஸ் பிராவிடண்ட் ஃபண்ட் ஆர்கனைசேஷன் (EPFO) வெளியிட்டுள்ளது. புது டெல்லியில் நடைபெற்ற 238வது சென்ட்ரல் போர்ட் ஆஃப் ட்ரஸ்டிஸ் கூட்டத்தில், மெம்பர்களுக்கு தகுதி பெறும் PF பேலன்ஸை 100% வரை வித்டிரா செய்ய அனுமதி அளிக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பணி ஓய்வு அல்லது வேலை இழந்த சமயங்களில் முழு PF தொகையையும் எளிதாகப் பெற முடியும்.

தற்போதைய விதிகளின்படி, வேலை இழந்த ஒருவரால் ஒரு மாதத்துக்குப் பிறகு 75% தொகையையும், அடுத்த இரண்டு மாதங்களுக்கு பின்னர் மீதமுள்ள 25% தொகையையும் வித்டிரா செய்யலாம். பணி ஓய்வுக்குப் பிறகு எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் முழு பணத்தையும் பெற அனுமதிக்கப்படும். இதற்குட்பட்டே வீடு வாங்குதல், நிலம் வாங்குதல் அல்லது வீட்டுக்கடனை அடைப்பது போன்ற காரணங்களுக்காக 90% வரை பணத்தை எடுத்துக்கொள்ளும் வசதியும் தொடர்கிறது.
மேலும், உடல் நலக்குறைவு, கல்வி அல்லது திருமணம் போன்ற சிறப்பு தேவைகளுக்காகவும் பகுதி வித்ட்ராயல்கள் செய்யலாம். கல்விக்கு 10 மடங்கும், திருமணத்திற்குப் 5 மடங்கும் வரை வித்ட்ரா செய்ய அனுமதிக்கப்படுகிறது. இதற்கான குறைந்தபட்ச பணி சேவை காலம் 12 மாதங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பணி ஓய்வுக்குப் பிறகு சேமிப்புகளைப் பாதுகாப்பதற்காக, மெம்பர்கள் தங்கள் அக்கவுண்டில் குறைந்தபட்சம் 25% தொகையை வைத்திருக்க வேண்டும் என்ற புதிய விதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், ஆவணங்கள் இன்றி ஆட்டோமேட்டிக்காக பார்ஷியல் வித்ட்ராயல்கள் செயல்படுத்தப்படும் என EPFO தெரிவித்துள்ளது. இத்தகைய மாற்றங்கள் ஊழியர்களுக்கு வேகமான, எளிதான நிதி சேவைகளை உறுதிசெய்யும் வகையில் செயல்படுத்தப்படுகின்றன.