ஜப்பான்: பூனை குறுக்கே சென்றால் பணம் பெருகும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கு. எங்கு? யாருக்கு தெரியுங்களா?
நம் நாட்டில் பூனை குறுக்கே சென்றால் தடையாக நினைத்து விலகிச் செல்வது வழக்கம். அபசகுணமாக கருதுவோம். ஆனால் தெற்கு ஜப்பானில் இருக்கும் ஓஷிமா தீவுகளில் பூனை குறுக்கே சென்றால் பணம் பெருகும் என அந்த தீவு மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
இந்த தீவுகளில் பட்டு மற்றும் படகு தொழிலை சேதப்படுத்தி வந்த எலிகளை ஒழிப்பதற்காக பூனைகளை மக்கள் வளர்க்கத் தொடங்கினர். தற்போது தெற்கு ஜப்பான் தீவுகளில் மனிதர்களை விட பூனைகள் அதிகம் வசிக்கின்றன.