திருநாகேஸ்வரம்: திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவில் எதிரில் இருந்த மதுபான கடை வேறு பகுதிக்கு பல வருட போராட்டத்திற்கு பிறகு கடை மாற்றப்பட்டதால் பாமகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் நவக்கிரக தலங்களில் ராகு ஸ்தலமாக போற்றப்படும் நாகநாத சுவாமி கோவில் எதிரில் இந்தியன் வங்கி அருகில் அரசு மதுபான கடை இயங்கி வந்தது இதனால் கோயிலுக்கு ஒரு பக்தர்கள் வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் குடிமகன்களால் பெரும் அவதிக்கு ஆளாகினர்.
பலரும் மது அருந்திவிட்டு வங்கி வாசலில் விழுந்து கிடப்பதும் கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு இடையூறு செய்வதும் என்பது தொடர்கதையாக இருந்து வந்த நிலையில் திருநாகேஸ்வரம் பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பாமகவினர் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி கடையை அப்புறப்படுத்த கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று நாகநாதசுவாமி கோவில் எதிரே உள்ள அரசு உத்தரவிட்டதன் பேரில் டாஸ்மாக் மதுபான கடை பூட்டப்பட்டு அங்கிருந்த மதுபானங்கள் லாரி மூலம் எடுத்து வேறு ஒரு பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு பவுண்டரிகபுரம் அருகே பொது மக்களுக்கு இடையூறு இல்லாத இடத்தில் மாற்றப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.
இந்த தகவல் அறிந்து கடை முன்பு திரண்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.