சென்னை: பேருந்து, கார் என சொகுசாக பயணம் செய்தாலும் ரயிலில் பயணம் செய்வது போன்ற வசதி இருக்காது. அடிப்படை வசதிகளோடு பாதுகாப்பும் உள்ளதால் பொதுமக்கள் பெரும்பாலானோர் ரயிலில் பயணிக்கவே விரும்புவார்கள்.
அந்த வகையில் தினந்தோறும் பல கோடி மக்கள் ரயிலில் பயணம் செய்து வருகிறார்கள். எனவே ரயில் பயணிகளுக்கு வசதிகளை அதிகரித்து கொடுக்கும் வகையில் புதிய, புதிய திட்டங்களையும் ரயில்வே நிர்வாகமும் செயல்படுத்தப்படுகிறது.
அந்த வகையில் குளிர்சாதன பெட்டியில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மட்டுமே பெட் ஷீட் மற்றும் தலையணை வழங்கப்பட்டு வரும் நிலையில், வருகிற ஜனவரி 1ஆம் தேதி முதல் தூங்கும் வசதி கொண்ட ஸ்லீப்பர் வசதி கொண்ட பெட்டியில் முன்பதிவு செய்து பயணிக்கும் பெட் ஷீட் மற்றும் தலையணை வழங்கப்படவுள்ளது.
ஸ்லீப்பர் வசதி பெட்டி பயணிகளுக்கு புதிய திட்டம்
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், தூங்கும் வகை (Sleeper Class) பயணிகளுக்கான வசதி மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், புதிய முன்னோடியான சேவையை அறிவித்துள்ளது. இந்திய ரயில்வேவில் முதல் முறையாக நன்கு சுத்தம் செய்யப்பட்ட படுக்கைப் பொருட்களான பெட்ஷீட் மற்றும் தலையணை வழங்கப்படவுள்ளதாக தெரிவிகப்பட்டுள்ளது. இந்த சேவையானது ஜனவரி 1ஆம் தேதி முதல் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
AC வசதி இல்லாத ஸ்லீப்பர் பயணிகள், தங்களது பயணத்தின் போது தேவைப்பட்டால் கட்டண அடிப்படையில் சுத்தமான படுக்கைப் பொருட்களை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.