கொல்கத்தா: கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வந்தடைந்தார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி 3 நாள் பயணமாக இன்று அதிகாலை கொல்கத்தா வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கொல்கத்தாவில் லியோனல் மெஸ்ஸி சிலை திறப்பு விழா நடக்கிறது. அங்குள்ள யுவ பாரதி மைதானத்துக்கு செல்லும் மெஸ்ஸி, முதல் மந்திரி மம்தா பானர்ஜி, நடிகர் ஷாருக் கான், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி ஆகியோரை சந்திக்கின்றார்.
அதன்பின், நட்பு ரீதியான கால்பந்து போட்டியில் பங்கேற்கிறார். தொடர்ந்து, ஐதராபாத் செல்லும் மெஸ்ஸி அங்குள்ள ராஜிவ்காந்தி மைதானத்தில் நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியில் விளையாடுகிறார். இதில் தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டியும் விளையாடுகிறார். மெஸ்ஸியை கொண்டாடும் விதமாக இசை கச்சேரி நடக்கிறது.
தொடர்ந்து, மும்பை செல்லும் மெஸ்ஸி இந்திய கிரிக்கெட் கிளப்பில் நடைபெறும் படேல் கோப்பை நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பிரபலங்களுடன் கால்பந்து போட்டியில் பங்கேற்கும் அவர், வான்கடே மைதானத்தில் நடக்கும் பேஷன் ஷோ நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.
நாளை மறுதினம் மெஸ்ஸி டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசுகிறார். அருண் ஜெட்லி மைதானத்தில் மினர்வா அகாடமி வீரர்களைப் பாராட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.