By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் தேர்தலில் கடும் போட்டியை உருவாக்கியுள்ள நித்யா ராமன்
    2 Min Read
    மிசோரம் எல்லை கிராமத்துக்குள் அகதிகள் வருகை அதிகரிப்பு
    1 Min Read
    மியான்மரில் உள்நாட்டு போர்: ராணுவத்தின் கை மீண்டும் ஓங்குகிறது
    1 Min Read
    சிறுவனை கடத்திய வழக்கில் கனடாவில் இந்தியருக்கு சிறை தண்டனை
    1 Min Read
    ஆட்கள் நீக்கமா? இன்போசிஸ் தலைமை அதிகாரி கொடுத்த விளக்கம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    சந்தோசமான வாழ்க்கை என்றால் என்ன?
    2 Min Read
    மனைவியின் மனதில் இடம் பிடிக்க சில விஷயங்களை விட்டு கொடுத்து தான் ஆக வேண்டும்!
    2 Min Read
    பெண்கள் கணவரிடம் இருந்து மறைக்கும் விஷயங்கள்!!
    2 Min Read
    வங்கி மோசடியில் ஈடுபட்ட நபர்… இந்தியா அழைத்து வந்தது சிபிஐ
    1 Min Read
    கேரளாவில் கிணற்றில் இறங்கி தூர் வாரிய பஞ்சாயத்து பெண் உறுப்பினர்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    ஆண்கள் பெண்களிடம் கவனிக்கும் அப்பாவி விஷயங்கள்!
    2 Min Read
    கடந்த காதலை வாழ்க்கை துணையிடம் கூறுவதால் ஏற்படும் சிக்கல்கள்!
    2 Min Read
    குழந்தைகள் வளர்ப்பில் கவனம் தேவை!
    2 Min Read
    உங்கள் திருமண பந்தத்தை மகிழ்ச்சியாக மாற்ற..!
    2 Min Read
    பெற்றோர்கள் நல்ல விஷயங்களை குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுப்பது எப்படி ?
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: ராஜராஜனின் மெய்க்கீர்த்தி பற்றி தெரியுங்களா?
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > இந்தியா > ராஜராஜனின் மெய்க்கீர்த்தி பற்றி தெரியுங்களா?
இந்தியா

ராஜராஜனின் மெய்க்கீர்த்தி பற்றி தெரியுங்களா?

Nagaraj
Last updated: December 31, 2025 6:27 pm
By Nagaraj 3 Min Read
Share
SHARE

தஞ்சாவூர்: ராஜராஜனின் மெய்க்கீர்த்தி பற்றி தெரிந்து கொள்வோமா…

பழங்காலத்தில் தமிழ் மன்னர்களின் கல்வெட்டுகளையும் செப்பேடுகளையும் அவர்களின் பரம்பரையைப் பற்றிய புகழுரைகளுடன் ஆரம்பிப்பதுதான் வழக்கமாக இருந்து வந்தது. கல்வெட்டுகளை செதுக்கியவர்கள், மன்னர்கள் அபிமானத்தைப் பெறுவதற்காக ஏகப்பட்ட புகழுரைகளை அதில் கூறியிருப்பர். வெற்றுப் புகழுரைகளை விட்டு, மன்னர்கள் அடைந்த வெற்றிகளை மெய்க்கீர்த்திகளாக (உண்மையான புகழாக) பொறிக்கும் வழக்கம், முதலாம் ராஜராஜன் காலத்தில் தோன்றியது என்பது பெரும்பாலான வரலாற்று அறிஞர்களின் முடிவாகும்.

மெய்க்கீர்த்திகள் அகவற்பாவில் அமைந்துள்ளன. முதலாம் ராஜராஜனின் ஆட்சிக்காலத்தில் எட்டாம் ஆண்டுக் கல்வெட்டுகளிலிருந்து , அதாவது பொயு 993ம் ஆண்டிலிருந்து இவை காணப்படுகின்றன. இந்த மெய்க்கீர்த்திகள், அவர்களது ஆட்சிக்காலத்தில், மன்னர்கள் அடையும் வெற்றிகளை வைத்து வளர்ந்து கொண்டே இருக்கும். இது எந்த ஆண்டுகளில் எந்த நாடுகள் வெற்றி கொள்ளப்பட்டன என்பதை அறிய செய்கிறது.

ராஜராஜனின் மெய்க்கீர்த்தி பற்றி தெரிந்து கொள்வோமா…
ஸ்வஸ்திஶ்ரீ
திருமகள் போலப் பெருநிலச் செல்வியும்
தனக்கே உரிமை பூண்டமை மனக்கொளக்
காந்தளூர்ச் சாலை கலமருத் தருளி எனத் தொடங்கி நீண்டு செல்கிறது மெய்க்கீர்த்தி.

மங்கல ஒலியான ஸ்வஸ்திஶ்ரீ என்ற அடைமொழியோடு தொடங்கும் இந்த மெய்க்கீர்த்தி என்ன கூறுகிறது என்றால்… திருமகள் போல பெருநலச் செல்வியும் தனக்கே உரிமை பூண்டமை மனக்கொள்ள’, அதாவது திருமகள் எப்படி ராஜராஜனுடன் இருக்கிறாளோ அதேபோல, பெருநலச் செல்வியான நில மாதையும் தனக்கு உரிமையாக்கிக்கொள்ள நினைத்து, ‘காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி’ – மெய்க்கீர்த்தியின் இந்த வரி பெரும் ஆராய்ச்சிகளையும் விவாதங்களையும் எழுப்பியிருக்கிறது.

ராஜராஜன் அடைந்த முதல் வெற்றியாக காந்தளூர்ச்சாலை வெற்றியை இது குறிக்கிறது. ஆனால் காந்தளூர்ச்சாலை என்பது என்ன, கலமறுத்தருளி என்றால் என்ன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். பண்டாரத்தார் போன்ற வரலாற்றாசிரியர்கள், இது திருவனந்தபுரத்திற்கு அருகே உள்ள ஒரு கடற்படைத் தளம் என்றும், சேரர்களின் கடற்படை பலத்தை அழிக்கும் ஒரு பகுதியே இந்த காந்தளூர்ச்சாலை கலம், அதாவது கப்பல்களை அழித்த நிகழ்வு என்று குறிப்பிட்டுள்ளனர்.

இன்னும் சிலரோ சாலை என்பது போர்ப்பயிற்சி அளிக்கும் பள்ளி ஒன்றைக்குறிக்கும். பயிற்சிப்பள்ளிகளை அழித்து சேரர்களின் வலுவை ராஜராஜன் அழித்ததே இது என்று கூறுகின்றனர். இதற்கும் ஆதித்த கரிகாலன் கொலைக்கும் தொடர்பு உண்டு என்றும் அவர்களில் சிலர் கூறுகின்றனர். எது எப்படியோ, ராஜராஜன் அடைந்த முதல் முக்கிய வெற்றி இந்த காந்தளூர்ச்சாலை கலம் அறுத்தது.

அடுத்து ராஜாராஜன் அடைந்த வெற்றிகள் வரிசையாகக் குறிப்பிடப்பட்டுள்ளன, வேங்கை நாடு, அதாவது கிருஷ்ணா-கோதாவரி நதிகளுக்கிடையே உள்ள கீழைச்சாளுக்கியர்களின் வேங்கி நாட்டு வெற்றி, அதற்கடுத்து கர்நாடகாவில் மைசூருக்குத் தெற்கே கங்கர்களின் நாடான கங்கபாடி, அவர்களின் சிற்றரசான நுளம்பபாடி, மைசூருக்கு அருகில் உள்ள இன்னொரு அரசான தடிகைபாடி, குடகு மலை நாடு ஆகிய இடங்களில் அடைந்த வெற்றிகள். பிறகு சேரநாட்டிலுள்ள கொல்லம், இன்றைய ஒரிசாவின் தென்பகுதியான கலிங்க நாடு ஆகிய இடங்களை வெற்றிகொண்டது.

சிங்களவர்களின் நாடான இலங்கை வெற்றி, இன்றைய மகாராஷ்ட்டிர மாநிலத்தின் தென்பகுதியான இரட்டை பாடி ஏழரை இலக்கம் என்ற நாடு ஆகிய நாடுகளை வெற்றி கொண்டதை இந்த மெய்க்கீர்த்தி குறிக்கிறது. மாலத்தீவுகளை ராஜராஜன் வெற்றி கொண்டதும் குறிப்பிடப்பட்டுள்ளது. சோழர் கடற்படை அடைந்த முதல் முக்கியமான வெற்றி இது. இந்தப் படையெடுப்பு, சோழ நாட்டு வணிகர்களைப் பாதுகாக்கும் முகமாகவே நடைபெற்றிருக்க வேண்டும். இந்த வெற்றிதான் பின்னால் ராஜேந்திரன் கடாரம் கொள்வதற்கு அடிகோலியது. இத்துடன் ராஜராஜனின் வெற்றிச் செய்திகள் நிறைவடைகின்றன.

அப்படிப்பட்ட ‘திறன்மிக்க வெற்றிகளை அடையக்கூடிய படைகளைக் கொண்ட அவர் வாழ் நாளில் எல்லா ஆண்டும் (அவரை) வணங்கக் கூடிய ஆண்டே, செழியர்களான பாண்டியர்களை ஒளி குன்றச் செய்த ராஜகேசரி ராஜராஜ தேவருக்கு ….’ என்று மெய்க்கீர்த்தி ராஜராஜனைப் புகழ்ந்துரைக்கிறது.

இந்த மெய்க்கீர்த்தியின் இன்னொரு சிறப்பம்சம், ராஜராஜன் அடைந்த வெற்றிகளைக் குறிப்பிட்டாலும், தோல்வியடைந்த அரசர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல், நாடுகளின் பெயர்களை மட்டும் குறிப்பிட்டு விட்டுவிடுவதுதான். மெய்க்கீர்த்திகளிலேயே ராஜராஜனுடையது தனித்தன்மை வாய்ந்தது ஆகும் என்றால் மிகையில்லை.

You Might Also Like

சந்தோசமான வாழ்க்கை என்றால் என்ன?

மனைவியின் மனதில் இடம் பிடிக்க சில விஷயங்களை விட்டு கொடுத்து தான் ஆக வேண்டும்!

பெண்கள் கணவரிடம் இருந்து மறைக்கும் விஷயங்கள்!!

வங்கி மோசடியில் ஈடுபட்ட நபர்… இந்தியா அழைத்து வந்தது சிபிஐ

கேரளாவில் கிணற்றில் இறங்கி தூர் வாரிய பஞ்சாயத்து பெண் உறுப்பினர்

TAGGED:historical inscriptionkingsRajarajaspecial featureUniquenessஅரசர்கள்சிறப்பம்சம்தனித்தன்மைமெய்க்கீர்த்திராஜராஜன்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
வர்த்தகம்

மரக்காணத்தில் உப்பு உற்பத்தியில் தொழிலாளர்கள் மும்முரம்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?