விழுப்புரம்: மரக்காணம் பகுதியின் முக்கிய தொழில் என்றால் உப்பு தயாரித்தல்தான். தற்போது வெயில் தாக்கம் அதிகம் இருப்பதால் உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது.
வெயிலின் தாக்கம் அதிகமாகி வெப்பம் அதிகரித்திருப்பதால் மரக்காணம் பகுதியில் உப்பு உற்பத்தியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
விழுப்புரம் மரக்காணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 3,500 ஏக்கர் பரப்பளவில் உப்பளங்கள் உள்ளன. இங்கு உப்பு தொழிலை நம்பி 3,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர்.
இங்கு ஆண்டுதோறும் சுமார் 25 லட்சம் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. நாளை முதல் கத்திரி வெயில் துவங்கினால் மேலும் உற்பத்தி அதிகரிக்கும் என உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.
வெயில் தாக்கம் அதிகம் இருப்பதால் உப்பு உற்பத்தி இந்தாண்டு அதிகரிக்கும் என்ற நம்பிக்கையும் உருவாகியுள்ளது.