சென்னை: கடலூரில் ரூ.1.15 லட்சம் கோடி முதலீட்டில் மிகப்பெரிய பெட்ரோலிய பொருட்கள் உற்பத்தி வளாகம் அமைக்க இரண்டு தனியார் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
தமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்க அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த திட்டம் உருவாகியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று இந்திய நிறுவனத்துடன் இணைந்து இந்த வளாகத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் பல லட்சம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.