தஞ்சாவூர்: தஞ்சாவூரில் நடிகர் துரை.சுதாகர் இல்லத்தில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் நடிகர் சிங்கம் புலி பங்கேற்றார்.
தஞ்சையில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட இயக்குனரும், நகைச்சுவை நடிகருமான சிங்கம்புலி கேக் வெட்டி கொண்டாடினார்.
பின்னர் உதய சூரியன் சின்னத்தின் அடையாளமாக 5 விரல்களை விரித்து காட்டி அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
தஞ்சை அருகே திருக்கானூர்ப்பட்டியில் உள்ள திரைப்பட நடிகர் துரை.சுதாகர் தோட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றது. இதில் இயக்குனரும், நகைச்சுவை நடிகருமான சிங்கப்புலி, குட்டி புலி சக்தி சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு கேக் வெட்டி புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
பின்னர் நடிகர் சிங்கம் புலி அனைவருக்கும் கேக் ஊட்டி விட்டார். இதையடுத்து அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், 2026 ம் ஆண்டு அனைவருக்கும் சிறப்பான ஆண்டாக அமைய வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். எல்லோரும் இன்புற்று இருக்க வேண்டுமே தவிர வேறு ஒன்றும் இல்லை. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் எனக்கூறி உதயசூரியன் சின்னத்தின் அடையாளமாக ஐந்து விரல்களை காட்டினார்.
அப்போது நிருபர்கள் உதயசூரியன் சின்னம் போல் காட்டுகிறீர்களே என்று கேட்டதற்கு, தன் பாணியில் அப்படி காட்டிட்டேனா அப்போ இன்னொரு முறை காட்டுகிறேன் எனக்கூறி உதயசூரியன் சின்னத்தின் அடையாளமாக ஐந்து விரல்களை விரித்து காட்டினார்
2026 ல் விஜய் முதலமைச்சராக வருவேன் என்று கூறி உள்ளாரே என்று கேள்வி எழுப்பப்பட்டது. சொல்லிட்டாரா ம்ம்ம் என்று அழுத்தி கூறி நக்கலடித்தார். பின்னர் உற்சாகமான அனைவரும் புத்தாண்டை வரவேற்று மகிழ்ந்தனர். அனைவருக்கும் வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொண்டனர்.