By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    பாதுகாப்பு காரணங்களால் புதின் எடுத்த அதிரடி முடிவு
    1 Min Read
    ‘அவதார்’ படத்திற்கு எதிராக நடிகை கொரியன்கா கில்ச்சர் வழக்கு
    1 Min Read
    சுற்றுலா கப்பலில் பரவும் ஹண்டா வைரஸ்… பயணிகள் அதிர்ச்சி
    1 Min Read
    மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி… மோடிக்கு அதிபர் டிரம்ப் வாழ்த்து
    1 Min Read
    நியூயார்க்கில் நடைபெற்ற ‘மெட் காலா’ நிகழ்ச்சி..!
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    பெட்ரோல் விலையை கட்டுக்குள் இந்தியா வைத்திருப்பது எப்படி?
    1 Min Read
    தீப்புண்ணை ஆற்றும் குணம் கொண்டது பீட்ரூட்
    1 Min Read
    நீண்ட நேரம் தொடர்ச்சியாக ‘இயர்போன்’ பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சனைகள்
    1 Min Read
    அளவற்ற நன்மைகளை அள்ளித்தரும் திராட்சை ரசம்!
    2 Min Read
    பல நோய்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் கொய்யா இலை!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் 7ம் இடம் பிடித்தது தஞ்சாவூர்
    2 Min Read
    பள்ளி செல்லாக் குழந்தைகள் குறித்து கணக்கெடுப்பு
    1 Min Read
    உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்ள தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுங்கள்!
    1 Min Read
    வலிகளை போக்கும் குணமுடைய அரத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
    1 Min Read
    ரத்த அழுத்த பிரச்சனையா? அவரைக்காயை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: திருப்பூரில் புதிய கோட்ட அலுவலகத்தை தொடக்கி கரூர் வைஸ்யா வங்கி
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > வர்த்தகம் > திருப்பூரில் புதிய கோட்ட அலுவலகத்தை தொடக்கி கரூர் வைஸ்யா வங்கி
வர்த்தகம்

திருப்பூரில் புதிய கோட்ட அலுவலகத்தை தொடக்கி கரூர் வைஸ்யா வங்கி

Nagaraj
Last updated: April 27, 2026 5:57 pm
By Nagaraj 3 Min Read
Share
SHARE

தஞ்சாவூர்: திருப்பூர் நகரில் கரூர் வைஸ்யா வங்கியின் புதிய கோட்ட அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தனியார் துறை வங்கிகளுள் செழுமையான பாரம்பரியத்தையும், சிறப்பான செயல்பாட்டையும் கொண்டிருக்கும் கரூர் வைஸ்யா வங்கி (KVB), திருப்பூர் மாநகரில் தனது புதிய கோட்ட அலுவலகத்தை திறந்துள்ளது.

வங்கியின் நிர்வாக பணிகளையும் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கும் செயல்பாடுகளையும் மேலும் சிறப்பாகவும், துரிதமாகவும் வழங்க வேண்டுமென்ற குறிக்கோளின் அடிப்படையில் இந்த கோட்ட அலுவலகத்தை இவ்வங்கி நிறுவியிருக்கிறது. “இந்தியாவின் பின்னலாடை நகரம்” என்று அழைக்கப்படும் தொழில் நகரான திருப்பூரின் தொழில் வளர்ச்சிக்கு இவ்வங்கி அளிக்கும் முக்கியத்துவத்தை இந்த முக்கியமான நடவடிக்கை பிரதிபலிக்கிறது. இதன் மூலம் உள்ளூர் அளவிலேயே கடனுக்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரமும், மூத்த அதிகாரிகளின் அணுகலும் இப்பிராந்தியத்தைச் சேர்ந்த மக்களுக்கும், தொழில்துறை நிறுவனங்களுக்கும் எளிதாக கிடைப்பதை இவ்வங்கி இந்நடவடிக்கையின் மூலம் உறுதி செய்திருக்கிறது.

திருப்பூரின் வளர்ச்சியடைந்து வரும் பொருளாதாரத் தேவைகளுக்கு ஏற்ப திட்டமிட்டு அதனை நிறைவேற்றும் நோக்கத்தோடு இந்த புதிய கோட்ட அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, திருப்பூர் மண்டலத்தில் கரூர் வைஸ்யா வங்கி 37 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. ஜவுளி மற்றும் பின்னலாடைகள் ஏற்றுமதியில் உலக அளவில் சிறந்து விளங்கும் திருப்பூர் மாநகரில், ஆயிரக்கணக்கான சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs) உள்ளன. இவைகளுக்கு விரைவாக கடன்/நிதி வசதிகளும், சிறந்த நிதி ஆலோசனைகளும் தேவைப்படுகின்றன.

இந்த புதிய கோட்ட அலுவலகம் திறக்கப்பட்டிருப்பதால் வங்கியின் மூத்த அதிகாரிகளும் நிதித்துறை நிபுணர்களும் உள்ளூர் அளவிலேயே பணியாற்றி துரிதமான சேவையை வழங்குவதால், உள்ளூர் தொழில் முனைவோர், ஏற்றுமதியாளர்கள் மற்றும் ஆடை உற்பத்தியாளர்களுக்கு மிக விரைவாக வணிகக் கடன்களும் நிதி சேவைகளும் கிடைக்கும்.

கோட்ட அலுவலகத்தின் திறப்பு விழாவில், கரூர் வைஸ்யா வங்கி நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ரமேஷ் பாபு பேசுகையில், “இந்தியாவின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தில் திருப்பூர் பிராந்தியம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. எங்கள் வங்கியின் புதிய கோட்ட அலுவலகத்தை தொடங்கியிருப்பதன் மூலம், நிர்வாகப் பணிகள் மற்றும் கடன்களுக்கு ஒப்புதல் வழங்கும் அதிகாரம் பெற்ற குழுக்களை வாடிக்கையாளர்களுக்கு மிக அருகில் நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம். இதன் மூலம் கடன் விண்ணப்பங்கள் மிக விரைவாகப் பரிசீலிக்கப்பட்டு, ஒப்புதல்கள் வழங்கப்படும்.

உள்ளூர் தொழில் நிறுவனங்கள் உலக அளவில் பிற நாடுகளோடு போட்டிபோடவும், மேலும் வளர்ச்சி அடையவும் தேவையான சிறப்பான நிதி சேவைகள் உடனடியாக கிடைக்கும்” என்றார்.

பாரம்பரிய வங்கி சேவையின் நம்பகத்தன்மைக்கும் மற்றும் நவீன யுகத்தில் வேகமான வணிக செயல்பாடுகளுக்கு இடையிலுள்ள இடைவெளியைக் குறைக்கும் பணியை இந்த புதிய அலுவலகத்தின் மூலம் கரூர் வைஸ்யா வங்கி தொடர்ந்து வழங்கும். 110 ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட வங்கியின் இந்த புதிய அலுவலகத்தின் மூலம், இப்பகுதியின் வணிகர்களும், தொழில்நிறுவனங்களும், கார்ப்பரேட் நிறுவனங்கள், சிறு-நடுத்தர தொழில் நிறுவனங்கள்) மற்றும் வர்த்தக நிதிச் சேவைகளின் விரிவான தொகுப்பை மிக எளிதாகவும், விரைவாகவும் பெற்று பயனடைய முடியும்.

1916-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கரூர் வைஸ்யா வங்கி, இந்தியாவின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றாகும். இந்த வங்கிக்கு நாடு முழுவதும் 902 கிளைகளும், 2,228-க்கும் மேற்பட்ட ஏடிஎம் மற்றும் பணம் செலுத்தும் இயந்திரங்களும் உள்ளன. 31.12.2025 நிலவரப்படி, இவ்வங்கியின் மொத்த வர்த்தகம் ரூ. 2,11,647 கோடி என்ற அளவில் இருந்தது. இதில் வைப்புத்தொகை ரூ. 1,14,595 கோடி, மற்றும் வழங்கப்பட்ட கடன்கள் ரூ. 97,052 கோடி என்ற அளவில் இருந்தன. 2026-ஆம் நிதியாண்டின் 3-வது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ. 690 கோடியாகவும், நிகர வாராக்கடன் 0.19% ஆகவும் உள்ளது.

You Might Also Like

இன்றைய தங்கம் விலை நிலவரம் பற்றி தெரியுங்களா?

மரக்காணத்தில் உப்பு உற்பத்தியில் தொழிலாளர்கள் மும்முரம்

நூல் விலை உயர்வு: தொழில் துறையினர் அதிர்ச்சி

தங்கம் விலை உயர்வு – இன்றைய நிலவரம் என்ன?

3ம் நாளாக நேற்றும் கடும் சரிவை சந்தித்த பங்கு சந்தை

TAGGED:Divisional OfficeIndustrial CityKarur Vysya BankPrivate BankTiruppurகரூர் வைஸ்யா வங்கிகோட்ட அலுவலகம்தனியார் வங்கிதிருப்பூர்தொழில்நகரம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
ஆன்மீகம்

பிள்ளையார் பிடித்து வைப்பதால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?