சென்னை: தமிழகத்தில் உள்ள மொத்த மதுக்கடைகளின் எண்ணிக்கை மற்றும் மூடப்பட்ட கடைகள் பற்றிய தகவல்களை வழங்க டாஸ்மாக் மறுத்திருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு, “கோப்பு நிலுவையில் உள்ளது; எனவே தகவல் வழங்க இயலாது” என்று டாஸ்மாக் நிர்வாகம் பதிலளித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது 4,765 மதுக்கடைகள் இயங்கி வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே இயங்கி வந்த 717 மதுக்கடைகளை மூட அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், மதுக்கடைகளின் மொத்த எண்ணிக்கை மற்றும் மூடப்பட்ட கடைகளின் விவரங்களை கோரி தாக்கல் செய்யப்பட்ட RTI மனுவுக்கு முழுமையான தகவல் வழங்கப்படவில்லை. இந்த நடவடிக்கை வெளிப்படைத்தன்மைக்கு எதிரானது என சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
டாஸ்மாக் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் தகவல் அறியும் உரிமை மனுக்களுக்கு தெளிவான பதில்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.