ஈரான்: அமெரிக்காவுடன் இந்த வார இறுதியில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்ற டிரம்பின் கூற்றை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமலில் இருந்தாலும், அமைதி பேச்சுவார்த்தையில் இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்த வார இறுதியில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். ஆனால் ஈரான் வெளியுறவு அமைச்சகம் அதனை மறுத்துள்ளது.
ஈரான் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி, அமெரிக்காவுடனான எந்த இறுதி ஒப்பந்தமும் இதுவரை முடிவாகவில்லை என்றும், ஈரானின் சிவப்புக் கோடுகளில் சமரசம் செய்யப்படாது என்றும் தெரிவித்தார்.
ஈரான் அரசின் தஸ்னிம் மற்றும் பார்ஸ் செய்தி நிறுவனங்களும் ஒப்பந்த வரைவு எதுவும் அங்கீகரிக்கப்படவில்லை என கூறியுள்ளன. இதனால் அமைதி ஒப்பந்தம் தொடர்பான குழப்பம் நீடித்து வருகிறது.