சென்னை: திருப்பதி – காட்பாடி ரெயில்வே பிரிவில் நடைபெறும் பராமரிப்பு பணிகளால் பல மெமு மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் முழுமையாகவும் பகுதியாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தெற்கு ரெயில்வே வெளியிட்ட அறிவிப்பின்படி, திருப்பதி – காட்பாடி வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் ஜூன் 19, 22, 26, 29 மற்றும் ஜூலை 3, 6, 10, 13 ஆகிய தேதிகளில் பல பயணிகள் மெமு ரெயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.
அதேபோல் விழுப்புரம் – திருப்பதி மற்றும் திருப்பதி – விழுப்புரம் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் குறிப்பிட்ட தேதிகளில் காட்பாடி – திருப்பதி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன. பயணிகள் முன்கூட்டியே தங்களது பயண திட்டங்களை மாற்றிக்கொள்ள தெற்கு ரெயில்வே அறிவுறுத்தியுள்ளது.