அமெரிக்கா: இந்தியாவின் நீண்டகாலம் பிரதமராக பணியாற்றிய பெருமையை பெற்றுள்ள நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வாழ்த்து தெரிவித்து பாராட்டியுள்ளார்.
இந்தியாவின் மிக நீண்ட காலம் பிரதமராக பணியாற்றிய தலைவர்களில் ஒருவராக விளங்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், “இந்தியாவின் மிக நீண்ட காலம் பிரதமராக பணியாற்றிய என் நண்பர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள். அவர் ஒரு மாபெரும் தலைவர். சிறந்த மனிதர். வலிமையான, ஆரோக்கியமான மற்றும் அறிவார்ந்த மனிதர். இனிவரும் ஆண்டுகளிலும் மகத்தான சாதனைகளையும் வெற்றிகளையும் தொடர்ந்து பெறுவார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
டிரம்பின் இந்த பதிவு சர்வதேச அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.