தஞ்சாவூா்: தஞ்சை மாவட்ட ஸ்டேட் வங்கி ஊழியர் சங்கம் திருச்சி மண்டலம் சார்பாக உறுப்பினர்கள் கலந்தாய்வு கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது.
இந்த விழாவில் ஸ்டேட் வங்கி ஊழியர் சங்கம் சென்னை வட்டாரத்தின் தலைவர் ஹாஜா பக்ருதீன் , பொதுச்செயலாளர் ஸ்ரீதரன், துணை தலைவர் இமானுவேல் இளவேந்தன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இதில் திருச்சி மண்டலம் ஸ்டேட் வங்கி ஊழியர் சங்க துணை பொது செயளாலர் கிருஷ்ணமூர்த்தி , துணை பொது செயளாலர் ஆண்ட்ரூஸ் பால்ராஜ், துணை தலைவர் அனந்தகிருஷ்ணன், துணை பொதுச்செயலாளர் (கிளைகள்) பாண்டி, உதவி பொது செயலாளர்கள் ஜான்கிங்ஸ்டன், ஓம்பிரகாஷ், ராஜ்குமார், கோபாலகிருஷ்ணன், விஜயராஜன், என்சிபிஇ தஞ்சை மாவட்ட செயளாலர் வினோத் மற்றும் 400-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் பொதுச்செயலாளர் ஸ்ரீதரன் நிருபர்களிடம் கூறுகையில், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) ஸ்டாஃப் யூனியன் சங்கத்தின் சார்பாக, மண்டலம் 10 மற்றும் 13—அதாவது தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மண்டலத்தின் சார்பாக இந்த உறுப்பினர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறுகிறது.
நாங்கள் ஐந்து நாள் வேலை நாட்கள் குறித்து 2016-ல இருந்து கோரிக்கை விடுத்துக் கொண்டு இருக்கிறோம். அரசு 2 மற்றும் 4வது வார சனிக்கிழமைகளில் விடுமுறை கொடுத்துள்ளனர். ஆனால் நாங்கள் மாதத்தின் அனைத்து சனிக்கிழமையும் விடுமுறை வேண்டும் என்று கோரி வருகிறோம். இதனால் கஸ்டமர் சர்வீஸ் பாதிக்கப்படுறதுக்கு வாய்ப்பு இல்லை. இதற்காக நாங்க கூடுதலாக பணியாற்றவும் தயாராக உள்ளோம். எங்கள் யூனியன் வாயிலாக அதையும் நாங்க அரசாங்கத்துக்கு தெரிவித்துள்ளோம். இது எங்களின், இந்த கூட்டத்தோட முக்கியமான கோரிக்கையாகும்.
அதேபோல, ஆட்களை நியமனம் செய்வது போதிய அளவில் நடைபெறவில்லை. அதையும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற இருக்கிறோம். அதேபோல, பிரைவடைசேஷன் (Privatization). அரசு இன்றைய காலகட்டத்தில் டிஸ்இன்வெஸ்ட்மென்ட் (Disinvestment)… அவங்களோட பங்குகளை வந்து பிரைவேட் (Private) கைல கொடுக்கும் நோக்கத்தில் செல்கின்றனர். அதையும் நாங்கள் எதிர்த்து வருகிறோம். தனியார் மயம் ஆனால் அதோட விளைவுகள் மிக மோசமா இருக்கும்.
அடித்தட்டு மக்கள் அனைவரும் வந்து இன்னைக்கு வங்கியில கணக்கு தொடங்கி வரவு செலவு செய்து வருகின்றனர். இது பெருமுதலாளிகளிடம் போய்விட்டால் வெகுவாக பாதிக்கப்படும். இதையெல்லாம் எதிர்த்து, வலியுறுத்தி வருகிறோம். இதுவும் முக்கியமான ஒரு தீர்மானம் ஆகும்.
எங்க வங்கியை பொறுத்தவரைக்கும், ஸ்டேட் பேங்க்ல ரெக்ரூட் பண்ணும்போது அந்த மாநில மொழிக்கு ஒரு தேர்வு வச்சுதான் எடுக்குறாங்க. ஆனா, இது வந்து எங்க வங்கியில நடக்குறதுக்கு வாய்ப்பு இல்லை. மற்ற வங்கியில நடக்குது. பட், மொழி தெரியாமல் இருக்கக் கூடாது. அதே சமயத்துல அந்த மாநிலத்துல இருக்கிறவங்களுக்கு உரிமை தரணும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.