தஞ்சாவூர்: 54 வயது பெண்ணின் வயிற்றில் இருந்த 15 கிலோ கட்டியை அகற்றி தஞ்சாவூர் ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டர் மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். அந்த கட்டி ஆரம்ப நிலை புற்றுநோய் கட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது.
திருவாரூரை சேர்ந்த 54 வயது பெண்ணுக்கு வெகு நாட்களாக மூச்சு திணறல் இருந்து வந்துள்ளது. இதற்காக அந்த பெண் இரண்டு மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டுள்ளார். மருந்துகள், மாத்திரைகள் என பல்வேறு சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதையடுத்து தஞ்சாவூர் ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டர் மருத்துவமனை குறித்து அறிந்த அந்த பெண்ணின் குடும்பத்தினர் இங்கு அழைத்து வந்தனர். மருத்துவமனையில் அந்த பெண்ணிற்கு மூச்சு திணறலை சரி யெ;வது தொடர்பான சிகிச்சை முதலில் மேற்கொள்ளப்பட்டுள்ளது_
தொடர்ந்து இதற்கு காரணம் குறித்து கண்டறிய ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர் மருத்துவர்கள் குழுவினர் அந்த பெ;ணணின் வயிற்றில் பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த பெண்ணின் வயிற்றில் வீக்கம் உள்ளதை அறிந்து அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கரு முட்டையிலிருந்து கட்டி வளர்ந்துள்ளதை மருத்துவக்குழுவினர் கண்டுபிடித்தனர்.
மேலும் அப்பெண்ணின் குடும்பத்தினர் ஒப்புதலோடு தஞ்சாவூர் ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டரின் புற்றுநோய் அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர் ஏ.என். லெசின் குமார் மற்றும் திறமைவாய்ந்த மருத்துவக்குழுவினர் 6 மணிநேரம் அதி நவீன தொழில்நுட்பம் கொண்ட அறுவை அரங்கில் அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். மிகவும் நுணுக்கமான, துல்லியமான முறையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அந்த பெண்ணின் வயிற்றில் இருந்த 15 கிலோ எடை கொண்ட கட்டியினை மிக குறுகிய நேரத்தில் அகற்றி சாதனை படைத்தனர்.
அறுவை சிகிச்சை செய்த பின்னர் அந்த கட்டியை திசு ஆய்வுக்கு (Biopsy) ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர் மருத்துவக்குழுவினர் அனுப்பி பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த பெண்ணின் வயிற்றில் இருந்து அகற்றப்பட்டது ஆரம்ப நிலை புற்றுநோய் கட்டி என்பது தெரியவந்தது. உரிய நேரத்தில் ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர் மருத்துவக்குழுவினர் உரிய சிகிச்சை அளித்ததால் அந்த பெண் நலமுடன் வீடு திரும்பினார்.
உரிய நேரத்தில் அக்கட்டியை அகற்றியதால் புற்று நோய்க்கான மேற்படி சிகிச்சை அவருக்கு தேவைப்படாது என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தகவலை மருத்துவர் லெசின் குமார் நிருபர்கள் சந்திப்பில் விளக்கமாக எடுத்து கூறினார். அப்போது மூத்த ஆலோசகர் டாக்டர் மோகன், மருத்துவமனை துணை மருத்துவக்கண்காணிப்பாளர் டாக்டர் தீபக் நாராயணன், புற்றுநோய் மருத்துவ சிகிச்சை சிறப்பு டாக்டர் கவி சக்கரவர்த்தி ஆகியோரும் உடன் இருந்தனர்.
மூச்சு திணறல் காரணமாக பல நாட்களாக அவதிப்பட்ட தன்னுடைய உயிரை காப்பாற்றி மேலும் புற்றுநோய் கட்டியை சரியான நேரத்தில் கண்டுபிடித்து சிகிச்சை கொடுத்த தஞ்சாவூர் ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர் மருத்துவர்களுக்கும், மருத்துவமனை ஊழியர்களுக்கும் அந்த பெண்ணும் அவரது உறவினர்களும் தங்களின் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து கொண்டனர்.
இம்மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை ஆண்டு முழுவதும் சலுகை கட்டணத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து விதமான நோய்கள் குறித்தும் அறிந்து கொள்ள இந்த பரிசோதனையை பல்வேறு தரப்பினரும் பயன்படுத்தி வருகின்றனர். வேறு எங்கும் இல்லாத வகையில் சலுகை கட்டணத்தில் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் மருத்துவக்குழுவினர் தரப்பில் தெரிவித்தனர்.