புதுடில்லி: உலகம் முழுவதும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவைகள் திடீரென முடங்கியதால் லட்சக்கணக்கான பயனர்கள் பாதிக்கப்பட்டனர்.
மெட்டா நிறுவனத்தின் கீழ் செயல்படும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளங்கள் திடீரென செயலிழந்தன. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சேவைகள் பாதிக்கப்பட்டதால் உலகம் முழுவதும் பயனர்கள் சிரமம் அடைந்தனர்.
பயனர்கள் தங்களது கணக்குகளில் இருந்து தானாக வெளியேற்றப்படுவது, பதிவுகள் ஏற்றப்படாதது, செய்திகள் திறக்கப்படாதது உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டன. அமெரிக்கா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் இருந்து அதிகளவிலான புகார்கள் பதிவாகியுள்ளன. இலங்கை உள்ளிட்ட பல நாடுகளிலும் பாதிப்பு உணரப்பட்டது.
சைபர் தாக்குதலா அல்லது தொழில்நுட்ப கோளாறா என்பது குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் இதுவரை வெளியாகவில்லை.