நியூயார்க்: ஸ்பேஸ்எக்ஸ் நிறுவன பங்குகள் உயர்ந்ததைத் தொடர்ந்து எலான் மஸ்க் உலகின் முதல் டிரில்லியனர் என்ற சாதனையைப் படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான எலான் மஸ்க், ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களின் மூலம் உலகளவில் பெரும் செல்வாக்கைப் பெற்றுள்ளார்.
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் பங்குச்சந்தையில் அறிமுகமான முதல் நாளிலேயே 11 சதவீதம் உயர்ந்து 167 டாலர் வரை சென்றதாக கூறப்படுகிறது. இதனால் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2.18 டிரில்லியன் டாலராக உயர்ந்தது. இதன் விளைவாக எலான் மஸ்கின் சொத்து மதிப்பும் கணிசமாக உயர்ந்துள்ளது.
டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் மட்டுமின்றி நியூராலிங்க் மற்றும் தி போரிங் கம்பெனி போன்ற நிறுவனங்களிலும் அவர் பங்குதாரராக உள்ளார்.
2021-ஆம் ஆண்டு அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸை பின்னுக்குத் தள்ளி உலகின் நம்பர்-1 பணக்காரராக மாறிய எலான் மஸ்க், தற்போது புதிய சாதனையை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.