ஈரான்: அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், வளைகுடா நாடுகளுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதிப்பேச்சு நடைபெற்று போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரு நாடுகளும் மீண்டும் நேரடி மோதலில் ஈடுபட்டுள்ளன.
ஹார்முஸ் ஜலசந்தியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க அப்பாச்சி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து பதற்றம் அதிகரித்துள்ளது. இதற்கு பதிலடியாக ஈரானின் கெஷ்ம் தீவு மற்றும் கடலோர பகுதிகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து பஹ்ரைன், குவைத் மற்றும் ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியதாக ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு தங்களது நிலப்பரப்பு அல்லது ராணுவ தளங்களை பயன்படுத்த எந்த வளைகுடா நாடும் அனுமதிக்கக் கூடாது என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.