சென்னை: உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள ‘அங்கீகாரம்’ திரைப்படம் வரும் ஜூன் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், ஜே.பி. தென்பாதியான் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அங்கீகாரம்’. தடகள வீரர்களின் வாழ்க்கைப் போராட்டங்களையும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
சிந்தூரி விஸ்வநாத், விஜி வெங்கடேஷ், ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
அண்மையில் வெளியான படத்தின் முன்னோட்டம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது இரண்டாவது பாடலான ‘வெற்றி விழா ஆன்தம்’ வெளியாகியுள்ளது.
உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படம் விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.