கரூர்: கரூர் வைஸ்யா வங்கி, விசா தளத்தில் அவுரா, சமாரா, அல்துரா மற்றும் எடெர்னிஸ் எனும் 4 புதிய கிரெடிட் கார்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
எடெர்னிஸ் கார்டில் 10,000 ரிவார்டு புள்ளிகள், கிளப் மேரியட் உறுப்பினர் சலுகை, விமான நிலைய லவுஞ்ச் வசதி மற்றும் அன்னிய செலாவணி கட்டண விலக்கு வழங்கப்படுகிறது.
அல்துரா கார்டில் 7,500 ரிவார்டு புள்ளிகள் மற்றும் பல்வேறு பிரீமியம் சந்தா சலுகைகள் இடம்பெற்றுள்ளன.
சமாரா கார்டில் ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் உணவக பயன்பாட்டிற்கு கூடுதல் பலன்கள் வழங்கப்படுகின்றன. அவுரா கார்டில் அமேசான் பிரைம் மற்றும் ஜொமேட்டோ கோல்டு உறுப்பினர் சலுகை வழங்கப்படுகிறது.