புதுடில்லி: உலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்வால் இந்திய ரிசர்வ் வங்கியின் அன்னிய செலாவணி இருப்பில் தங்கத்தின் பங்கு கணிசமாக அதிகரித்துள்ளது.
மே 22 நிலவரப்படி ஆர்.பி.ஐ. வசம் உள்ள தங்கத்தின் மொத்த மதிப்பு ரூ.11 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
மார்ச் 2026 நிலவரப்படி ஆர்.பி.ஐ.யின் நிகர வெளிநாட்டு சொத்துக்களில் தங்கத்தின் பங்கு 17.20 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது 2024ல் 8.30 சதவீதமாகவும், 2025ல் 12 சதவீதமாகவும் இருந்தது.
மேலும் ஆர்.பி.ஐ. வசம் 880.52 மெட்ரிக் டன் தங்கம் இருப்பதாகவும், கடந்த நிதியாண்டில் மட்டும் 168.06 மெட்ரிக் டன் தங்கம் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.