மெக்சிகோ: மெக்சிகோவில் 60 ஆண்டுகளுக்கு முன் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு முழு இழப்பீடு வழங்கவில்லை எனக் கூறி விவசாயிகள் சாலை மறியல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மெக்சிகோவில், 60 ஆண்டுகளுக்கு முன் நெடுஞ்சாலை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு முழு இழப்பீடும் வழங்கப்படாததை கண்டித்து விவசாயிகள் தொடர்ந்து 2-வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மெக்சிகோ சிட்டி – புயெப்லா நகரங்களை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலையில் அவர்கள் மறியலில் ஈடுபட்டதால் வாகன ஓட்டிகள் உணவு, குடிநீரின்றி கடும் அவதிக்கு உள்ளாகினர்.
இடையே 2 மணி நேரம் மட்டும் வாகனங்கள் செல்ல வழி விட்ட விவசாயிகள் மீண்டும் மறியல் போராட்டத்தை தொடர்ந்ததால் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.