சென்னை: சினிமா வேறு, அரசியல் வேறு. என்று தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வாக்களித்த பின்னர் எல்.கே.சுதீஷ் தெரிவித்தார்.
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தே.மு.தி.க. பொருளாளர் எல்.கே.சுதீஷ் வாக்களித்தார். பின்னர் வெளியே வந்த அவர் நிருபர்க ளிடம் கூறுகையில், “நான் 25 வருடங்களாக தயாரிப்பாளராக இருக்கிறேன். ஒவ்வொரு தேர்தலிலும் ஜனநாயக கடமையை ஆற்றிக் கொண்டிருக்கிறேன். விஜயகாந்த் இருக்கும் போதும் வந்து வாக்களித்துள்ளேன்” என்றார்.
அப்போது அவரிடம் நிருபர்கள், “தி.மு.க. கூட்டணிக்கு தே.தி.மு.க. போனதால் விஜயகாந்த் ஆன்மா மன்னிக்காது என்று எதிர்க்கட்சியினர் சொல்கிறார்களே” என்று கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு அவர், “அரசியல் இங்கு பேச வேண்டாம், இது சினிமா நிகழ்ச்சி’ என்று கூறி விட்டு அங்கிருந்து சென்றார்.