சென்னை: இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து, வங்காளதேசத்தின் சமூக-அரசியல் காலநிலை அடிக்கடி மாற்றத்தை சந்தித்து வருகிறது. இது பக்கத்து மாநிலமான மேற்கு வங்காளத்தை கணிசமாக பாதிக்கிறது. பிரிவினையைச் சுற்றியுள்ள கொந்தளிப்பான நிகழ்வுகள் பங்களாதேஷிலிருந்து மில்லியன் கணக்கான மக்கள் இடம்பெயர்வதற்கு வழிவகுத்தது,
அவர்கள் மேற்கு வங்காளம், திரிபுரா, அசாம் மற்றும் மேகாலயா போன்ற இந்திய மாநிலங்களில் தஞ்சம் புகுந்தனர். பலர் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பும் நம்பிக்கையுடன் வந்தனர், ஆனால் “அகதி” என்ற நிரந்தர முத்திரையை பெற்றனர். பல தசாப்தங்களுக்குப் பிறகு, வங்காளதேசம் மீண்டும் அமைதியின்மையை எதிர்கொண்டுள்ளது. இங்குள்ள சிறுபான்மை சமூகங்கள் பாதுகாப்பின்மையால் சிக்கித் தவிக்கும் நிலையில், வங்காள இந்துக்கள் பக்கத்து நாட்டில் சிறுபான்மை உரிமைகளைப் பாதுகாக்க வலியுறுத்தி தங்கள் வேதனையை வெளிப்படுத்தி உள்ளனர்.
1971 ஆம் ஆண்டு இந்தியாவுக்குத் தப்பி வந்த சுஷில் கங்கோபாத்யாய், வங்காளதேசத்தின் நோகாலி மாவட்டத்தில் தனது வளமான வாழ்க்கையை நினைவு கூர்ந்தார். “எங்களது பெரிய குடும்பம். அதிக நிலங்கள் இருந்தன. ஆனால் விடுதலைப் போரின் போது, பாகிஸ்தான் இராணுவமும், ரசாக்கர்களும் எங்களைத் தாக்கினர். வீடுகள் எரிக்கப்பட்டன, பலர் கொடூரமாக கொல்லப்பட்டனர். இதை கூறும் போது அவரது குரலில் சோகம் இருந்தது. சுதந்திரத்திற்குப் பிந்தைய சிறிது காலத்திற்குப் பிறகு, பெரும்பான்மை சமூகத்தின் தொடர்ச்சியான விரோதம் அவரை இந்தியாவில் நிரந்தரமாக அடைக்கலம் தேட வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது.
வங்கதேசத்தின் தற்போதைய சூழ்நிலை குறித்து சுஷில் கூறுகையில், வங்காளதேசத்தில் சமீபத்திய நிகழ்வுகளைப் பார்க்கும்போது மனது மிகவும் கனக்கிறது. கர்ப்பிணிப் பெண்ணை வயிற்றில் எட்டி உதைக்கும் காட்சிகளைப் பார்த்தேன். இதுபோன்ற கொடூரம் கற்பனை செய்துக்கூட பார்க்க முடியாதது. ஒரு இந்தியனாக, அவர்களைக் காப்பாற்றக் கோரிக்கை விடுக்கிறேன். எனக்கு 10 அல்லது 12 வயதுதான் இருக்கும். ரஸாகர்கள் எங்களை சித்திரவதை செய்தனர், ஆண்களின் உடலை நதிகளில் எறிந்தனர். பெண்களிடம் முறைகேடாக நடந்தனர். இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும் அந்த வடுக்கள் அப்படியே இருக்கின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வங்காளதேசத்தை விட்டு வெளியேறியபோது கர்ப்பமாக இருந்த பங்கானைச் சேர்ந்த அனிமா தாஸ் தனது வேதனைகளை கூறியதாவது: என் மகன் இளமையாக இருந்தான், என் மகள் என் வயிற்றில் இருந்தாள். நாடு மோதலில் மூழ்கியது. வீடுகள் எரிக்கப்பட்டன. பயத்தில், என் மாமனார் எங்களை இந்தியாவுக்கு அனுப்பினார். நான் பங்களாதேஷுக்கு சில முறை சென்றிருக்கிறேன், ஆனால் மீண்டும் அங்கு வசிக்கும் எண்ணத்தை என்னால் தாங்க முடியவில்லை என்றார்.
எல்லைப் பகுதிகளைச் சேர்ந்த பல நபர்கள் இதேபோன்ற உணர்வுகளை எதிரொலித்தனர். பலர் தங்கள் மூதாதையர் வீடுகளையும் நினைவுகளையும் விட்டுவிட்டு மதத் துன்புறுத்தலுக்குத் தப்பி ஓடிவிட்டனர். இடப்பெயர்ந்தால் ஏற்பட்டவலி இருந்தாலும், இந்தியா வழங்கும் பாதுகாப்புக்கு நிவாரணம் மற்றும் நன்றி உணர்வும் இருக்கிறது. பங்களாதேஷில் உள்ள இந்துக்களுக்கு அவர்களின் ஒருமித்த அறிவுரை… இந்தியாவில் தஞ்சம் அடையுங்கள் என்பதுதான்.
நியூடவுனுக்கு அருகில் வசிக்கும் ரஷோமோய் பிஸ்வாஸ் கூறுகையில், 1971க்குப் பிந்தைய துன்புறுத்தல்கள் பற்றி விளக்கினார். இந்துவாக இருப்பது ஒரு குற்றம். சுதந்திரத்திற்குப் பிறகும், நிம்மதி கிடைக்கவில்லை. பாகிஸ்தானிய இராணுவமும், ஜமாத் படைகளும் எங்களை குறிவைத்து, இந்துக்களின் வீடுகளை தாக்குதலுக்கு குறிவைத்தன. எனது குடும்பத்தினர் இரவு நேரங்களில் உணவு இல்லாமல் தலைமறைவாக இருந்தனர். நாங்கள் இப்போது இந்தியாவில் நிம்மதியாக வாழும் போது, எங்கள் உறவினர்கள் பலர் வங்கதேசத்தில் இருக்கிறார்கள். இந்திய அரசு தலையிட்டு, அங்குள்ள இந்துக்கள் அச்சமின்றி வாழ்வதை உறுதிசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றார்.