சென்னை: நாளை முதல் மழைங்க… தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை கோவை, நீலகிரி, தேனி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. 12 ஆம் தேதி 17 மாவட்டங்களில், 13ஆம் தேதி 11 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது.