பிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜிவி பிரகாஷ் சமூகவலைத்தளத்தில் உள்ள ஒரு ரசிகருக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார். அந்த ரசிகர், “நானும் என் மனைவியும் 4 நாட்களாக சரியாக சாப்பிடவில்லை. 500 ரூபாய் GPay பண்ண முடியுமா?” என்று உதவி கேட்டார்.
இதேவேளை, அந்தப் பதிவிற்கு கீழ் ஜிவி பிரகாஷ் உடனடியாக அந்த நபரின் GPay எண்ணை கேட்டு, 2500 ரூபாய் அவருக்கு அனுப்பினார். இதற்கு ஜிவி பிரகாஷ், “நன்றாக சாப்பிடுங்கள்” என உறுதிப்படுத்தினார். இது தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெறுகிறது.
ஜிவி பிரகாஷ், திரையுலகில் ‘வெயில்’ படம் மூலம் அறிமுகமானவர். பின்னர், ‘பொல்லாதவன்’, ‘அங்காடி தெரு’, ‘மதராசபட்டினம்’, ‘ராஜா ராணி’, ‘அசுரன்’ மற்றும் ‘சூரரைப் போற்று’ போன்ற படங்களில் இசையமைப்பதன் மூலம் பிரபலமாகி, தன் இசையால் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
தற்போது, ‘தங்கலான்’ படத்தின் இசையமைப்பிலும், ‘இடிமுழக்கம்’, ‘13’, ‘கிங்ஸ்டன்’ போன்ற படங்களிலும் தனது பணியை தொடர்கிறார்.