சென்னை: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வு வயதை 60ல் இருந்து 62 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டு 15 நாட்களில் அரசாணை வெளியிடப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவலை தமிழக அரசு நிராகரித்துள்ளது.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், நிதி நெருக்கடியை காரணம் காட்டி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வு வயது, 2021ல், 58ல் இருந்து, 60 ஆக உயர்த்தப்பட்டது. அப்போது, அரசுப் பணியில் சேர இளைஞர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாக பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டினர். தொடர்ந்து நடந்த சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றது. ஆனால், ஓய்வு பெறும் வயது குறைக்கப்படவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளாக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆகவே உள்ளது.
இந்நிலையில், சமீபத்தில், நிதி நெருக்கடி காரணமாக, அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை, 60ல் இருந்து, 62 ஆக உயர்த்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக, சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.மேலும், இது தொடர்பாக, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டது. மேலும் தலைமைச் செயலகத்துக்கு அனுப்பப்பட்டு, 15 நாட்களில் அரசாணை வெளியிடப்படும்.
இதையடுத்து இந்த தகவலின் அடிப்படையில் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். இந்நிலையில், தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள அறிக்கையில், “இப்படி வெளியாகும் தகவல்கள் முற்றிலும் வதந்தி.அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 62 ஆக மாற்ற தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.அப்படி எந்த பரிந்துரையும் இல்லை.