வயநாடு: கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 29ம் தேதி பெய்த கனமழையால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது.
நிலச்சரிவு காரணமாக முண்டகை, சூரல்மலை, மேப்பாடி கிராமங்கள் மண்ணுக்குள் புதையுண்டன. காட்டாற்று வெள்ளத்தில் வீடுகள் அடித்து செல்லப்பட்டன. 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
வயநாட்டில் நடந்த சம்பவம் குறித்து, ஜூலை 31ஆம் தேதி தனது எக்ஸ் பக்கத்தில் வருத்தத்தைப் பதிவு செய்த தொழிலதிபர் அதானி, “வயநாட்டில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான உயிரிழப்புக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எனது இதயம் செல்கிறது.
இந்த இக்கட்டான நேரத்தில் கேரளாவுக்கு அதானி குழுமம் துணை நிற்கிறது. ரூ.1000 நிதியுதவி வழங்குகிறோம். 5 கோடி கேரள முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு” என்று பதிவிட்டுள்ளார். இந்நிலையில், அதானி உறுதியளித்தபடி ரூ.1000 நிதியுதவி வழங்குவதாக அதானி குழுமம் பதிவிட்டுள்ளது. 5 கோடி கேரள முதல்வரிடம் நேரடியாக வழங்கப்பட்டது.