‘மேற்குத் தொடர்ச்சி மலை’ திரைப்படத்தின் இயக்குநர் லெனின் பாரதி, ‘கொட்டுக்காளி’ படத்தைப் பார்த்து மிகுந்த பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
இவர் தனது எக்ஸ் தளத்தில், “கொட்டுக்காளி… குடும்பம், சாதி, மதம் ஆகிய ஆணாதிக்க அமைப்புகள் பெண்ணுலகின் மீது நிகழ்த்தும் வன்மம், வக்கிரம், கயமைகளின் பெரும் பயணம்… முத்தங்கள்டா பி.எஸ்.வினோத்ராஜ். இப்படியானப் படைப்பைத் தயாரித்த சிவகார்த்திகேயன், நடித்த சூரி மற்றும் குழுவினருக்கும் கோடி நன்றிகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
‘கொட்டுக்காளி’ திரைப்படம், ஆணாதிக்கத்தை, சாதி மற்றும் மதத்தின் தாக்கங்களை விசாரணையாக்கியிருக்கிறது. இது, பெர்லின் மற்றும் ரோட்டர்டேம் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு அங்கீகாரம் பெற்றுள்ளது.
சூரியுடன் மலையாள நடிகை அனா பென் நடித்த ‘கொட்டுக்காளி’ படம், ஆகஸ்ட் 23-ல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.